'ஓடும் பேருந்தில்'.. திடீரென நடந்த 'விபரீதத்தால்'.. பதறிய சக பயணிகள்... நெஞ்சை உருக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேட்டூர் அருகே, போய்க் கொண்டிருந்த பேருந்தில் பெண்மணி ஒருவர் பேனாக்கத்தி கொண்டு தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பதற்றத்தை உண்டுபண்ணியது.

'ஓடும் பேருந்தில்'.. திடீரென நடந்த 'விபரீதத்தால்'.. பதறிய சக பயணிகள்... நெஞ்சை உருக்கும் காரணம்!

முன்னாள் ராணுவ வீரரான சந்தானம் மற்றும் அவரது மனைவி அகல்யா இருவரின் ஒரே மகள் காயத்ரி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத, காயத்ரியின் தாயார் அகல்யா பின்னாளில் சமாதானமாகியும், காயத்ரியின் தந்தை சந்தானம் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாயார் அகல்யா மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

கணப்பொழுதிலும் இந்த வேதனையிலேயே அகல்யா இருந்துள்ளார். இப்படி ஒரு சூழலில்தான், நெத்திமேடு அருகே உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்துள்ளார். தனது ஒரே மகளை பிரிந்து, துயரத்துடன் வாடியிருந்த அகல்யா, பேருந்தில் செல்லும்போது திடீரென தனது மகள் வசிக்கும் ஊரான  குள்ளமுடையானூர் என்கிற ஊரின் பெயர் பலகையைப் பார்த்ததும் மனம் வெதும்பி, தனது கையில் இருந்த பேனாக்கத்தி கொண்டு தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டுள்ளார்.

திடீரென, இப்படி நடந்ததால் பதறிப்போன பயணிகள், பின்னர் ஆசுவாசமாகி, உடனே அகல்யாவை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அகல்யா கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.