'ஒரு ரூமில் தாய்!'.. 'இன்னொரு ரூமில் மகள்'.. டிக்டாக் மோகத்தால் செய்த துணிகரம்! மனம் நொறுங்கிய குடும்பத்தலைவனின் விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் பொம்மன்நாயக்கன் பாளையம் ஒர்க் ஷாப் உரிமையாளர் ரவி. இவரது மனைவி கனகவல்லி. திருமணம் முடிந்து 19 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கைக்கு அடையாளமாக இந்த தம்பதியருக்கு 17 வயதில் ஒரு மகளும் 15 வயதில் ஒரு மகனும் என ரவியின் வாழ்க்கை சந்தோஷமாக சென்றுள்ளது.
இந்நிலையில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்த கனகவல்லி டிக்டாக்கிற்கு அடிமையாகி அதன் மூலம் ஈரோட்டை சேர்ந்த ஒரு நபருடன் வழங்கி வந்துள்ளார். தன் காதலனோடு இரவு பகல் பாராமல் கனகவல்லி உரையாட, பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த அவரது மகளுக்கும் இந்த டிக்டாக் நோய் தொற்ற, பிறகு அந்தச் சிறுமி டிக்டாக் மூலம் ஈரோட்டை சேர்ந்த டிப்ளமோ படிக்கும் மாணவனை காதலித்துள்ளார்.
தாயும் மகளும் ஒரே அறையில் தங்களது காதலர்களோடு செல்போனில் பேசி வந்ததை கவனித்த ரவி இருவரையும் கண்டிக்க, ரவியை வெறுத்த இருவரும், சில மாதங்கள் கழித்து, தாய் மகள் இருவரும் தத்தம் காதலர்களோடு தலைமறைவாகினர். அதன் பின், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் கனகவல்லியையும் அவரது மகளையும் ஈரோட்டில் கண்டுபிடித்து மீட்டு வந்து அறிவுரைகள் கூறி ரவியிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னரும் தாயும் மகளும் மீண்டும் காதலர்களை தேடிச் சென்று விட்டதால், போனில் அழைத்து சமாதானம் பேசியுள்ளார். அதற்கு அவரது மனைவி, “நான் அவரைத்தன் கல்யாணம் பண்ணிப்பேன். நீ தேவையில்லை” என்று கூறிவிட்டார். இதனை அடுத்து, ரவி தனது மகனை பார்த்துக்கொள்ளுமாறு சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் 15 வயதாகும் அவரது மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. தொழில்நுட்பங்களை சீரழிப்பதற்காக பயன்படுத்தினால், குடும்பமே சீரழிந்து போகும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்