'48 மணி நேரமா ஒரே இடத்துல குத்த வெச்சு உக்காந்திருக்கும் புரேவி!'.. “என் அனுபவத்துல இப்படி பாத்ததே இல்ல!” - தமிழ்நாடு வெதர்மேன் ‘வெளியிட்ட’ முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புரேவி புயல் மாறிய பிறகும், நின்ற இடத்தை விட்டு நகராமல் மன்னார் வளைகுடாவிலேயே காணப்படுவது ஏன் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார். நிவர் புயலுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான புரேவி புயல் இலங்கையின் திரிகோணமலை - பருத்தித்துறை அருகே கரையை கடந்தது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதிக்குள் நகர்ந்து குமரி- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டது.

'48 மணி நேரமா ஒரே இடத்துல குத்த வெச்சு உக்காந்திருக்கும் புரேவி!'.. “என் அனுபவத்துல இப்படி பாத்ததே இல்ல!” - தமிழ்நாடு வெதர்மேன் ‘வெளியிட்ட’ முக்கிய தகவல்!

ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. எனினும் தொடர்ந்து 48 மணி நேரம் புரேவி நகராமல் ஒரே இடத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார். இரு உயர் அழுத்த பகுதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட காற்றழுத்தம், இரு பகுதிகளிலும் நகர்வதற்கு கிரிப் இல்லாததால், ஒரே இடத்தில் தங்கி, இனி கிழக்கு பகுதி காற்றால் நகர்த்தப்படும். ஆனால் பருவமழை ஒன்று காரணமாக 48 மணி நேரமாக ஒரு புயல் ஒரே இடத்தில் இருப்பதை என் அனுபவத்தில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக தென் மேற்கு பருவமழையில் குஜராத்தில்தான் இப்படியான நிலை ஏற்படும். ஆனால் வடகிழக்குப் பருவமழையில் இதுதான் முதல் முறை. புரேவியின் இறுதி நிலைதான் இது. இது இன்று வலுவிழந்து நகர்ந்து விடும். 10 நாட்கள் மழை இருக்காது. ஆனால் கிழக்கு காற்றால் டிசம்பர் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்கும். பின்னர் படிப்படியாக மழை குறையும்” என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்