'250 பேர் சேர்ந்து மாஸ் பார்ட்டி...!' 'சரக்கு கஞ்சா என ஒரே அதகளம்...' அப்படியே அல்லேக்காக தூக்கி 'உள்ளே' வைத்த போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமூக வலைதளங்கள் மூலம் 250க்கு  மேற்பட்டோர் சேர்ந்து கொடைக்கானலில் இரவு நேர பார்டி நடத்தி போலீசாரின் விசாரணை வலைக்குள் சிக்கியுள்ளனர்.

'250 பேர் சேர்ந்து மாஸ் பார்ட்டி...!' 'சரக்கு கஞ்சா என ஒரே அதகளம்...' அப்படியே அல்லேக்காக தூக்கி 'உள்ளே' வைத்த போலீசார்...!

தமிழகத்தில் சுற்றுலா தளத்திற்கு பெயர்போன மலைகள் நிறைந்த ரம்மியமான கொடைக்கானல் பகுதி  சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல் தீய பழக்கமுடையவர்களின் கூடாரமாகவும் விளங்குகிறது என பரவலாக பேசப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது கொடைக்கானலில் 250 பேர் கைது செய்யபட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாக இணைந்து சில நாட்களாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதை செயல்படுத்தும் வகையில் கொடைக்கானல் குண்டுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்களின் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த பார்டியில் மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களில் சிலர் தென் மண்டல ஐஜிக்கு புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பார்ட்டி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததில் அனைவரும் அதிர்ந்தனர்.

பார்ட்டியில் கலந்துகொண்ட எல்லோரையும் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள், போதை வஸ்துகள் ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பார்ட்டி செய்து மாட்டிய நபர்களின் குடும்பங்களும் பதற்றத்தில் உள்ளனர்.

மேலும் போலீசார், சமூகவலைத்தளத்தில் யார் இந்த பார்ட்டியை முதலில் திட்டமிட்டது முதற்கொண்டு அவர்கள் எங்கிருந்து வந்திருந்தனர், அவர்களில் இருக்கும் யாருக்காவது போதைப்பொருட்கள் விற்பவர்களுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் தங்களின் விசாரணையை நடத்திவருகின்றனர்.

CATCHEDBYPOLICE