'எதிர் காலம் வரும் என் கடமை வரும்...' 'இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்...' - மீண்டும் கமல்ஹாசன் ட்வீட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார்..
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனைகளில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன எந்த இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என கமல்ஹாசன் விமர்சனம் செய்திருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? பிக் பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என கமல்ஹாசனை தாக்கி கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல் ஹாசன் சற்றுமுன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் அடுத்த ட்வீட்டாக `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்ற எம்.ஜி.ஆர். பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்