காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஆகியோர் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முன்னதாக, “வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! தமிழ்நாடு வாழ்க தமிழர் தரணியாள!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், “ஒவ்வொருவர் இல்லத்தின் வாசலிலும் "தமிழ்நாடு வாழ்க" எனக் கோலமிட்டுத் தமிழர் திருநாளாம் தை முதல் நாளை வரவேற்போம்.” என கேட்டுக்கொண்ட முதல்வர், முன்னதாக கொளத்தூரிலும், பின்னர் இன்று கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தினருடனும் பொங்கல் விழா கொண்டாடினார். இதற்கு முன்னரே அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதி நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, “நாம் அமைதியாகக் கொண்டாட திருவிழா- விடுமுறை நாட்களில் குடும்பங்களைப் பிரிந்து பணியாற்றும் காவலர்கள், தியாகத்தை மனமுவந்து ஏற்கும் அவர்தம் குடும்பத்தினர் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “நேரம் காலம் பார்க்காமல் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க உழைக்கும் காவல் துறையினருடன், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து தமிழர் திருநாளை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தோம்” என குறிப்பிட்டு அப்புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்