அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!

தமிழகம் முழுவதும் வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடையும்  நிலையில் வேலூர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக மீது களங்கம் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர். அங்கு ஏன் சோதனை செய்யவில்லை. மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் பணப்பட்டுவாடா செய்கிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை என ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.