"எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?"... முதல்வர் MK ஸ்டாலின் சொன்ன பரபர பதில் இதுதான்!!.. Exclusive!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.

"எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?"... முதல்வர் MK ஸ்டாலின் சொன்ன பரபர பதில் இதுதான்!!.. Exclusive!!

தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசிய முதல்வர்

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்களையும் மிக ஜாலியாகவும் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

பால்ய கால நினைவுகள்

அரசியலை தவிர, பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்க்க சென்றது பற்றியும், எம்ஜிஆர் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோ திரை அரங்கிற்கு சென்று பார்ப்பது என பல விஷயங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதே போல தனது சகோதரர் முக அழகிரியுடன் சேர்ந்து பைக் ஓட்ட தான் கற்றுக் கொண்டது குறித்தும் என பல பால்ய கால சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

MK Stalin about opponent party admk and bjp exclusive

அதே போல, நாடகம் மற்றும் சினிமாக்களில் தனது இளம் பருவத்தில் நடித்தது குறித்தும் என பல நிகழ்வுகளை இந்த நிகழ்ச்சி மூலம் முதல்வர் பகிர்ந்து கொண்டார். அப்படி இருக்கையில், சில Rapid Fire கேள்விகளுக்கு முதல்வர் MK ஸ்டாலின் சொன்ன பதில்களும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Rapid Fire கேள்விகள்

அப்போது நெறியாளர் கோபிநாத், "எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?" என்ற கேள்வியை முதல்வரிடம் முன் வைத்தார். இதற்கு பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின், "ரெண்டு பேரும் இல்லை" என்ற பதிலை தெரிவித்தார். அதே போல, "2024 ல மோடியா? ராகுலா?" என்ற கேள்வியை கோபிநாத் முன்வைக்க, "மக்கள் எடுக்க கூடிய முடிவு" என்றும் அசத்தலான பதிலையும் அளித்திருந்தார்.

MK Stalin about opponent party admk and bjp exclusive

இது தவிர, தமிழ்நாடா அல்லது தமிழகமா என்ற கேள்வி கேட்கப்பட, தமிழ்நாடு என ஒன்றிற்கு மூன்று முறை பதில் கூறி இருந்தார் முதல்வர் MK ஸ்டாலின். இது தவிர, கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் குறித்த கேள்விகளும் Rapid Fire செக்ஷனில் இடம்பெற்றிருந்தது.

MKSTALIN, GOBINATH, ADMK, BJP

மற்ற செய்திகள்