ஸ்டாலின் எனும் பெயருக்கு பின்னால் இவ்ளோ பிரச்சனை வந்துச்சா?.. ஆனாலும் கலைஞர் சொன்ன அதிரடி பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தம்முடைய 70 ஆவது பிறந்த நாளை வரும் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

ஸ்டாலின் எனும் பெயருக்கு பின்னால் இவ்ளோ பிரச்சனை வந்துச்சா?.. ஆனாலும் கலைஞர் சொன்ன அதிரடி பதில்..!

Also Read | "வாழ்வு, சாவு ரெண்டுலையும் ஒன்னா தான் இருப்போம்".. கணவரை தொடர்ந்து மனைவிக்கும் நேர்ந்த துயரம்!!... சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வராக இருந்த திமுக மூத்த தலைவர் கலைஞர். மு.கருணாநிதியின் மகன் ஆவார். கலைஞரின் மறைவுக்கு பின், திமுக கட்சிக்காக செயல்பட்டு வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து மக்கள் குறித்த பல பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் இறங்கி அதனை சரி செய்வதிலும் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

MK Stalin about issues faced in school by his name

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அதே போல, அவரது கேள்விகளுக்கு அசாத்திய பதில்களை அளித்து அனைவரையும் அசர வைத்துள்ளார் முக ஸ்டாலின். மேலும் அரசியல் தாண்டி தனது பெர்சனல் விஷயங்கள் பலவற்றையும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பகிர்ந்து கொண்டார். தனது திருமணம் குறித்தும், பிள்ளைகள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பற்றியும் பேசி இருந்தார்.

MK Stalin about issues faced in school by his name

Images are subject to © copyright to their respective owners.

அப்போது சிறு வயதில் ஸ்டாலின் என முக்கிய தலைவர் ஒருவரின் பெயரை வைத்தது பர்சனல் இன்ஸ்பிரேஷனாக இருந்ததா என்ற கேள்வியை கோபிநாத் முன் வைத்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "ரொம்ப பெருமையா இருந்துச்சு, ஆனா அதே நேரத்துல என்னை ஸ்கூல்ல சேர்க்கும் போது பிரச்சனை வந்துச்சு. என்னையும், என் தங்கையும் ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு முரசொலி மாறன் தான் பொறுப்பு எடுத்துக்கிட்டு அட்மிஷன் எல்லாம் வாங்கிட்டாரு.

MK Stalin about issues faced in school by his name

ஸ்கூல்ல சேர்க்குற அன்னைக்கு ஸ்டாலின் என்ற பெயர் இருந்தது பிரச்சனை ஆயிடுச்சு. ரஷ்யால இந்த பெயருக்கு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. அதனால இந்த பெயரை மட்டும் இப்ப மாத்தி கொடுக்கணும் அப்படின்னு சொல்லி ஸ்கூல்ல கேட்டாங்க. உடனே முரசொலி மாறன் வந்து தலைவர்கிட்ட கேட்டாரு. உடனே தலைவர் வந்து ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன்னு சொல்லி அந்த ஸ்கூல்ல சேர்க்காம எலிமன்டரி ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசி இருந்த கோபிநாத், "ஸ்டாலின் என்ற பெயருக்கு பின் இவ்வளவு ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கா?" என்றும் வியப்புடன் குறிப்பிட்டிருந்தார்.

Also Read | உதயநிதியா? செந்தாமரையா?.. யாரு செல்லப்பிள்ளை..😍 முதல்வர் MK ஸ்டாலின் அசத்தல் பதில்.. Exclusive

மற்ற செய்திகள்