"நீட் தேர்வை ஒழிக்கணும், அது வரைக்கும் ஓயமாட்டேன்".. முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சியம் இது தான்.. Exclusive!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.
Also Read | தனது எனர்ஜி டிரிங்கை ரசிகர் கையில் கொடுத்து அழகு பார்த்த சிராஜ்.. வைரலாகும் வீடியோ!!
தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.
இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.
மனதில் வைத்திருக்கும் விஷயம்
அதே போல, ஐந்து ஆண்டு ஆட்சியில் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு செய்தே ஆக வேண்டும் என நீங்கள் மனதில் வைத்திருக்கக் கூடிய விஷயங்கள் பற்றியும், நீங்கள் பர்சனல் ஆக செய்ய வேண்டும் என விரும்பும் விஷயம் பற்றியும் கோபிநாத் கேள்வி எழுப்ப இதற்கு பதில் சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதி மொழிகள் சொன்னமோ, அதெல்லாம் நிறைவேத்தனும்ங்குறது ஒன்னு. கலைஞர் தேர்தல் அறிக்கையில் முதல் பக்கத்திலேயே ஒரு ரெண்டு வரி எழுதி இருப்பார், திருக்குறள் மாதிரி ரெண்டு வார்த்தை. 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்'. சொல்லாததையும் செய்வோம் அப்படின்ற நிலைக்கு திராவிட மாடல் ஆட்சி நடந்துட்டு இருக்கு.
85 சதவீதங்கள் நம்ம சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடித்து இருக்கிறோம். மிச்சம் இருக்கக்கூடிய அந்த அறிவிப்புகளையும், திட்டங்களையும் அஞ்சு வருஷம் காத்துட்டு இருக்கணும்னு இருக்கிற நிலைமை இல்லாமல் விரைவிலே அது நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.
நீட்டை ஒழிக்கணும்
'களத்தில் முதலமைச்சர் ஆய்வு' ஒரு திட்டத்தை உருவாக்கி, எந்தத் திட்டம் எங்க பிளாக்கா நிக்குது, எந்த மண்டலத்தில், எந்த மாவட்டத்தில், எந்த ஊர்ல நம்ம அறிவித்த திட்டம் பெண்டிங்கா நிக்குது?. என்ன காரணம், என்ன பிராப்ளம், Legal ஆ என்ன பிராப்ளம், நிதி வரலையா இல்ல, அதிகாரிகள் தவறா அப்படிங்குற ஆய்வு நடத்தி, அதையும் வேகமா செயல்படுத்தி இருக்கோம். ரெண்டு மண்டலம் முடிச்சிட்டோம். இப்ப அடுத்து சவுத் மண்டலம் போக போறோம்.
கோட்டையில் உட்கார்ந்து ஆய்வு பண்றது மட்டுமில்ல, கோட்டையில் இருக்கிற ஒரு டேஷ் போர்டு வச்சி அதை ஆய்வு பண்றது மட்டுமில்ல, களத்திற்கே போய் முதலமைச்சர் ஆய்வுன்னு நடத்திட்டு இருக்கோம். பல பணிகள் நிறைவேற்றுவதில் சந்தோஷம். ஆனால் ஒன்றே ஒன்று. இந்த நீட், அதனால ஏழை, எளிய மாணவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள், மருத்துவ படிப்பை எட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கிற காரணத்தினால, எப்படியாவது நீட் என்பதை ஒழிக்கணும்ன்னு பல முயற்சிகள் எடுத்திட்டு இருக்கோம்.
ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஒரு முறைக்கு இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனா இன்னும் ஒன்றிய அரசு அது பற்றி முடிவு எடுக்கல. அதுக்காக தொடர்ந்து போராடிட்டு இருக்கோம், போராடுவோம். அதுதான் என்னுடைய லட்சியம். அதை முடிக்கிற வரைக்கும் நான் ஓயமாட்டேன்" என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
Also Read | வரலாற்றிலேயே முதல்முறை.. நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!
மற்ற செய்திகள்