“உதயநிதியும் எம் புள்ள தான்”.. மதுரையில் பெரியப்பா எம்.கே.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதி.!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி.வி.எஸ்.நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் வீட்டில் சந்தித்தார்.
அவரை மு.க.அழகிரி மற்றும் காந்தி அழகிரி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் காலின் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இதனை அடுத்து இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு பேசியதாக தெரிகிறது. இந்நிகழ்வுக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதில் பேசிய உதயநிதி, “நான் அமைச்சர் ஆன பின் பெரியப்பாவை(மு.க.அழகிரி) சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். அவரும் என்னை மனநிறைவுடன் வாழ்த்தினார். இது எனக்கு மகிழ்ச்சி தரும் விசயம்” என்று குறிப்பிட்டார். இதேபோல், நிரூபர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “எனது தம்பி மகன் (உதயநிதி)என்னிடமும், தனது பெரியம்மாவிடமும்(காந்தி அழகிரி) ஆசீர்வாதம் வாங்க வந்தார். அவரும் எனது பிள்ளை தான். அமைச்சர் ஆனதுமே நான் அவரை வாழ்த்தினேன். தற்போது நேரில் வாழ்த்து பெற்றார். எனது இல்லத்திற்கு அவர் வந்தது அளவில்லா மகிழ்ச்சி. சிறுவனாக அவர் இருக்கும்போது நெல்லையில் உள்ள எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.
எனது தம்பி மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர், அவரது மகன் உதயநிதி அமைச்சராகி இருக்கிறார். இதைவிட பெரிய மகிழ்ச்சி என்ன?” என கூறினார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் துணை மேயர் மன்னன், எம்.எல்.ராஜ் உள்பட பலர் இருந்தனர்.
மற்ற செய்திகள்