குடிநீர் தொட்டியில் மிதந்த சடலம்! இன்னொரு பக்கம் 7 நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞர்... கடலூரை நடுங்கவைத்த சம்பவம்.!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தில், சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இந்த பகுதியில் உள்ள இரண்டு நீர் தேக்க தொட்டியில் ஒரு தொட்டி கிராமத்தின் நடுவிலும், மற்றொன்று குளக்கரையிலும் உள்ளதாக தெரிகிறது.
இந்த நீர் தேக்க நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரக்கூடிய நீரை சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், குடிநீர் வினியோகம் செய்வதற்கு டேங்க் ஆபரேட்டர் நீர்த்தேக்க தொட்டியில் கீழே உள்ள தண்ணீரை திறந்து விட, அப்பொழுது தண்ணீரில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது,
இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீர்த்தேக்க தொட்டியில் மேலே சென்று பார்த்தபோது இறந்து போன இளைரது சடலம் ஒன்று மிதப்பதை பார்த்துள்ளனர். இதனை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன், நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு ஒரு இளைஞரது சடலத்தை மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட அந்த இளைஞர் வேறு யாருமில்லை, அதே கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரன் மூன்றாவது மகன் சரவணாகுமார் (35) தான் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 25.01.2023 அன்று முதல் காணவில்லை என அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்,30.01.2023 அன்று கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்ததாகவும் காவல்துறையினர் சரவணன் குமாரை தேடி வந்ததாகவும் கூறப்படும் நிலையில் அதே பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியில் ஏழு நாட்களாக காணாமல் போன சரவணகுமார் உடல் அழுகிய நிலையில் இருந்து தற்போது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேர்படி சரவணகுமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே அசுத்தமான நீர்த்தொட்டியில் இருந்த தண்ணீரை ஊர்மக்கள் பயன்படுத்தினால், வாந்தி மயக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய் தொற்றுகள் பரவும் என்பதால், அவை பரவாமல் இருக்க மருத்துவ குழுவினர் இரவு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் மேலும் வீடு வீடாக சென்று குளோரிமேஷன் தண்ணீரை கலந்து கொடுத்தனர்.
Also Read | "25 வயசு வரைக்கும் என் டயட் இப்படித்தான்".. விராட் கோலி பகிர்ந்த சீக்ரட்.. வைரல் வீடியோ..!
மற்ற செய்திகள்