‘3 நாளா வீட்டுக்கு வரல.. எங்க தேடியும் கிடைக்கல’.. கணவரை தேடிய மனைவிக்கு காத்திருந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காணாமல் போன கணவர் கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நம்பிகுளம் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் கெங்கமுத்து (வயது 35). ஒலிபெருக்கி அமைப்பாளரான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது மனைவி மற்றும் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து கெங்கமுத்துவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கெங்கமுத்துவை தேடிவந்தனர். இந்த சூழலில் நேற்று அப்பகுதியில் உள்ள காளி கோயில் அருகே இருக்கும் ஒரு கிணற்றில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினருடன் சென்ற போலீசார், அந்த சடலத்தை கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இதன்பின்னர் அந்த உடல் காணாமல் போன கெங்கமுத்து என்பதை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உறுதி செய்தனர்.
விசாரணையில், கிணற்றின் பக்கவாட்டு சுவரில் கெங்கமுத்து படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் தவறி கிணற்றுக்குள் விழுந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கெங்கமுத்து மரணம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்