மியாட் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மியாட் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் கோவிட்19-க்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மியாட் மருத்துவமனை 2021 பிப்ரவரி 3-ஆம் தேதி கோவிட்19-க்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் இணைந்தது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆதரவுடன், மியாட் அதன் முன்னணி பராமரிப்பாளர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது.
மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் முதல் தடுப்பூசியை எடுத்து கொண்டு முன்னால் இருந்து மற்ற ஊழியர்களுக்கு ஊக்கப்படுத்தினார். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் அவருடன் சேர்ந்து மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ, மருத்துவரல்லாத ஊழியர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.
இன்றுவரை மியார் மருத்துவமனையிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட முன்னணி பராமரிப்பாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவிட்19-க்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைத்தவுடன், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம் ஒன்றாக இணைந்து, இந்தியாவை ஒரு கோவிட்-19 பெருந்தொற்று நோய் இல்லாத நாடாக மாற்றுவோம்.
மற்ற செய்திகள்