'கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் இருக்கு’... ‘ஆனாலும், தமிழக மக்கள்’... ‘3 சவால்களை சந்திக்க வேண்டியிருக்கு’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், சவாலான இந்த காலகட்டத்தில் 2 மாதத்திற்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

'கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் இருக்கு’... ‘ஆனாலும், தமிழக மக்கள்’... ‘3 சவால்களை சந்திக்க வேண்டியிருக்கு’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்’...!!!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. முதல்வரின் நடவடிக்கையால் கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், தமிழக மக்கள் இன்னும் 3 சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது.

அவை, தற்போது நிலவும் வடகிழக்குப் பருவமழை காலம், அதனைத் தொடர்ந்து வரும் குளிர் காலம் மற்றும் பண்டிகை காலங்கள். இந்த சவாலான காலங்களில் பொதுமக்கள் அனைவரும் 2 மாத காலத்திற்கு முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்" எனக் கூறினார்.

மற்ற செய்திகள்