அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!.. 'பாதிப்பை தவிர்க்க 'இத' கண்டிப்பா செய்யணும்'!.. அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்க சிக்கன் இறைச்சி உள்ளிட்டவைகளை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்!.. 'பாதிப்பை தவிர்க்க 'இத' கண்டிப்பா செய்யணும்'!.. அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 31 பேர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமங்களில் உள்ளோருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான்,கேரளா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கடுமையான தாக்கத்தை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்