‘ஏதாவது சிரமம் இருக்கான்னு கேட்டேன்’.. ‘ஒரு மருத்துவர் சொன்னார்’.. ‘என் கண்களில் கண்ணீர்..!’.. உருகிய அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகலாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகள உடனுக்குடன் தனது ட்விட்ட்ர பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நாடுமுழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வீடுகளிலேயே இருந்தனர். இதனை அடுத்து கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் மாலை கைத்தட்டினர்.
#appreciation: Join me to appreciate the selfless service of medical fraternity!! The real warriors fighting #Covid19 on behalf of us. #clapforourcarers #Vijayabaskar #TNGovt pic.twitter.com/1DGUJbB4Iy
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
இந்நிலையில் கொரனா தொற்றை தடுக்க கடுமையாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.