"சாப்பாடு தரமா இருக்கணும்".. அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். இந்த சூழ்நிலையில் சேலம் மாவட்டத்தில் கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி.
அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டிகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா? என அவ்வப்போது அமைச்சர்கள் துவங்கி அதிகாரிகள் வரை திடீர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்குள்ள துவக்க பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பரிமாறப்படும் உணவுகளை சாப்பிட்டு தரத்தினை சோதித்த அமைச்சர் உதயநிதி, மாணவர்களிடமும் இதுபற்றி கேட்டறிந்தார்.
சேலம் நெத்திமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம்-சுவையை உறுதி செய்து, மாணவர்களின் வருகைப் பதிவேடு- காலை உணவு திட்டத்திற்கான மொபைல் செயலியை பார்வையிட்டு, பள்ளியில் உள்ள கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தோம். pic.twitter.com/iDj9l5jbxP
— Udhay (@Udhaystalin) February 16, 2023
சேலம் சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளி மற்றும் நெத்திமேடு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் சோதித்தார். பின்னர், உணவு கூடங்களில் இருக்கும் மூலப் பொருட்களின் இருப்பையும் ஆய்வு செய்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளிக்கு இன்று காலை சென்று மாணவர்களுடன் சிற்றுண்டி உண்டு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தோம். உணவின் தரம், சுவை, உணவு வரும் நேரம், மாணவர்கள் வரவர அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தோம். pic.twitter.com/jvASoQbnR0
— Udhay (@Udhaystalin) February 16, 2023
Also Read | நம்ம மதுரைக்காரரு.. கானா நாட்டில் கிடைத்த பதவி.. ஆப்பிரிக்காவை கலக்கும் தமிழன்..!
மற்ற செய்திகள்