"அமைச்சர் பதவி கிடைக்க காரணமே இவரு தான்".. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி குறித்து பேசியிருக்கிறார்.

"அமைச்சர் பதவி கிடைக்க காரணமே இவரு தான்".. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், நேற்று ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,"கடந்த முறை ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தேன். ஆனால், வரமுடியவில்லை. அதனால் இப்பொது நானே போன் செய்து வருகிறேன் என்றேன். எப்போதும் மாவட்ட செயலாளர்கள் என்னிடத்தில் நேரம் கேட்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு நானே நேரம் கொடுத்திருந்தேன். முதன் முறையாக அமைச்சராக இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன். எனக்கு அமைச்சர் பதவி கிடைத்ததற்கு காரணமே இங்கிருக்கும் நாசர் அண்ணன் தான். மாசத்தில் ஒரு முறையாவது பேட்டிகளில் சொல்லிவிடுவார். இங்கு வரும்போதே ஆவடிக்கு ஸ்டேடியம் வேண்டும் என கோரிக்கை வைத்துவிட்டார். மினி ஸ்டேடியம் தானே எனக்கேட்டேன். பெரிய ஸ்டேடியமாக வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். அதற்கு இடமும் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். நிச்சயம் அவை செயல்படுத்தப்படும்" என்றார்.

மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் இடையிலான நட்பு குறித்தும் உருக்கத்துடன் பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

UDHAYANIDHI STALIN, MINISTER, SPORTS

மற்ற செய்திகள்