இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் 'எனக்கும்' எந்தவித தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் 'எனக்கும்' எந்தவித தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்-ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர் முத்துராஜ் மற்றும் முருகன் என 5 பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தபோது, அவர் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி மிரட்டியதாக தகவல் வெளியானது. அந்த அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் தனக்கும், ஸ்ரீதருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர், ''சாத்தான்குளம் வழக்கில் கைதான ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது,'' என தெரிவித்து உள்ளார்.

மேலும்  சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு யார் மீதும் எந்த பாகுபாடும் கிடையாது. அரசுக்கு எந்தவித பாரபட்சமும் கிடையாது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முடிவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

மற்ற செய்திகள்