Oh My Dog
Anantham Mobile

தமிழகத்தில் அடிக்கடி Power Cut..? காரணம் இதான்.. "ஆனா இனிமே" .. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் அடிக்கடி Power Cut..? காரணம் இதான்.. "ஆனா இனிமே" .. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பல மணிநேரத்துக்கும் மேலாக பல பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வருகிறது. அதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதுபோன்ற சூழலில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 716 மெகாவாட் மின்சாரம் கிடைக்காததே மின் தட்டுப்பாட்டிற்கு காரணம். தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில், அதற்கு குறைவான நிலக்கரி மட்டுமே கிடைப்பதும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாததற்கு காரணம்’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

POWERCUT, SENTHILBALAJI

மற்ற செய்திகள்