தமிழகத்தில் பள்ளிகள் 'எப்போது' திறக்கப்படும்?... கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது குழந்தைகள் நலனை பாதிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக்தில் பள்ளிகள் திறப்பது குறித்த கேள்விக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்களிடம் கருத்து கேட்டபிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்