'பள்ளிகள் திறப்பது எப்போது?'... 'அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை'... 'வெளியாகும் முக்கிய முடிவுகள்'?... எதிர்பார்ப்பில் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கொரோனா கட்டுக்குள் வராத காரணத்தினால் பள்ளிகளை இன்னும் திறக்க முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி குறித்து அச்சம் அடைந்துள்ளார்கள். நிலைமை இப்படியே சென்றால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்தச்சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா என்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரும் 30ம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், பெற்றோர்கள் மத்தியில் இந்த ஆலோசனைக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்