"அவர் அப்படித்தான் சொல்லுவாரு.. ஓட்டு போட்ருங்க".. ஒரே வீட்டுக்குள் வாக்கு சேகரிக்க சென்ற பொன்முடி & செல்லூர் ராஜு.. வைரலாகும் கலகல வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒரே வீட்டிற்குள் அமைச்சர் பொன்முடி மற்றும் செல்லூர் ராஜு வாக்கு சேகரிக்க சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடை தேர்தலில் அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கள்ளுக்கடை மேடு கல்யாணசுந்தரம் வீதியில் அமைச்சர் பொன்முடியும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் ஒரே வீட்டிற்குள் சென்று வாக்கு சேகரித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட அமைச்சர் பொன்முடியும் செல்லூர் ராஜுவும் கலகலப்பாக பேச அங்கிருந்த தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து செல்லூர் ராஜுவிடம் தேர்தல் குறித்து பொன்முடி கலகலப்பாக பேச, வீட்டிற்குள் சிரிப்பொலி எழுந்தது. இதனையடுத்து அங்கிருந்த பெண்மணியிடம் அமைச்சர் பொன்முடி "போயிட்டு வரேன் அம்மா. அவர் அப்படித்தான் நிற்பார். ஓட்டு போட்டுருங்க" என சொல்லிவிட்டு செல்லூர் ராஜுவை பார்க்க, அவர் சிரித்துவிட்டு "அமைச்சர் அப்படி தான் சொல்லுவாரு" என கலகலப்புடன் கூறினார்.
Images are subject to © copyright to their respective owners.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ள நிலையில் அமைச்சர் பொன்முடியும் செல்லூர் ராஜுவும் சந்தித்துக் கொண்டு கலகலப்பாக பேசியது வைரல் ஆகி வருகிறது. பலரும் சோசியல் மீடியாவில் ஆரோக்கியமான அரசியலில் இது என குறிப்பிட்டு வருகின்றனர். முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் செல்லூர் ராஜுவும் பொன்முடியும் எதிரே சந்தித்துக் கொண்டனர். வாக்கு சேகரித்தபடி நடந்து வந்த செல்லூர் ராஜு காரில் வந்த பொன்முடியை பார்த்ததும் சிரித்தபடி வணக்கம் செலுத்திவிட்டு "ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே" என்று கூற சிரித்துக் கொண்டே அமைச்சர் பொன்முடியும் வணக்கம் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்