'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அ.தி.மு.க அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது, சென்னை போரூர் பகுதியிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு முன்பே தனக்கு கொரோனா என பரவியது என்று செய்தி தவறானது என அமைச்சர் அன்பழகனே மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா வைரஸிற்கு உண்டான அறிகுறிகள் ஏதும் இல்லை. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் அனைத்தும் இயல்பாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து லேசான இருமல் ஏற்பட்ட நிலையில், அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS