அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்.. எத்தனை கோடி தெரியுமா? - அமலாக்கத்துறை அதிரடி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.6.5 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்.. எத்தனை கோடி தெரியுமா? - அமலாக்கத்துறை அதிரடி

2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு அவர் சொத்து சேர்த்திருந்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன், மகன்கள் அனந்தபத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேசுவரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Minister Anita Radhakrishnan Assets Freeze, Enforcement

இந்த வழக்கு அமலாக்கத்துறையின் விசாரணைக்குச் சென்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேருக்கு ஆகஸ்ட் மாதம் சம்மன் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து தற்போது 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகளை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.6.5 கோடி எனவும் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றங்களில் இதுதொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பித்த பின்னர் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியின் போது அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுக கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்னிலையில், திமுகவின் மாநில மாணவரணித் துணைச் செயலாளருமான உமரி சங்கர் பேசியது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.  அந்தக் கூட்டத்தில், இந்த மாவட்டத்திலேயே  முதல் பணக்காரன் என் அம்மையுடைய சகோதரி குடும்பம் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ். இரண்டாவது பணக்காரர் 4,999 கோடி ரூபாய் சொத்து வச்சிருக்கிற அனிதா ராதாகிருஷ்ணன் தான் இரண்டாவது பணக்காரர் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Minister Anita Radhakrishnan Assets Freeze, Enforcement

ANITHA RADHAKRISHNAN, DMK, FISHERMEN MINISTER, TAMILNDU, DMK MINISTER

மற்ற செய்திகள்