“குழந்தைகள் உணவில் உலோகத் துகள்கள்!.. அதிர்ந்து போன இளம் தாய்!”.. சூப்பர் மார்க்கெட் சிசிடிவியில் தெரியவந்த ‘மிரள வைக்கும்’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்காட்லாந்தின் Lockerbieயைச் சேர்ந்த Morven Smith என்கிற தாய் ஒருவர் தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, உணவில் உலோகத் துகள்கள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதை தனது கணவரிடமும் அழைத்து காட்டியுள்ளார். பின்னர் மீண்டும் வேறொரு புதிய உணவு ஜாரை திறக்க அதற்குள்ளும் உலோகத் துகள்கள் கிடப்பதைக் கண்ட Morven-ன் கணவர் Harpreet க்கு, அந்த உணவை குழந்தைக்கு ஊட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று வருந்தியுள்ளனர். இதனிடையே மேற்கண்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான ஆறு உணவு ஜாடிகளில் நச்சுப்பொருள் கவந்திருப்பதாகவும், அதை சொல்ல வேண்டுமானால், 15 மில்லியன் பவுண்டுகள் தரவேண்டும் என்றும் மிரட்டல் கடிதம் பறந்தது. இதுபற்றி அந்த நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில்
இரவு பகலாக தூக்கமின்றி பல்வேறு பல்பொருள் அங்காடிகளில் சிசிடிவி கேமெராக்களை ஆராய்ந்த போலீஸார் Lockerbie-லுள்ள Tesco பல்பொருள் அங்காடி ஒன்றில், ஒரு நபர் சில போத்தல்களை உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள செல்ஃப் ஒன்றில் வைப்பது பதிவாகியுள்ளது. விசாரணையில், அவர் Nigel Wright என்னும் விவசாயி என்பதும், அவர்தான், உணவுப்பொருட்களில் உலோகத்துகள்களைக் கலந்ததும், பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும் நிரூபணமானது.
இதனை அடுத்து ரகசிய போலீசார் ஒருவர் 100,000 பவுண்டுகள் கிரிப்டோகரன்சியை அளிப்பதாக கூறி Nigel wright-ஐ சந்தித்தபோது பொறியில் சிக்கினார். அப்போது ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட Nigel Wrightக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்