'1 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஐடி வேலை'... 'உதறிய என்ஜினீயர்' ... முதல் முயற்சியிலேயே சாதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தான் பார்த்த ஐடி வேலையை உதறிவிட்டு, முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்து முன்னாள் ஐடி ஊழியர் அர்ச்சனா சாதனை படைத்துள்ளார்.

'1 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஐடி வேலை'... 'உதறிய என்ஜினீயர்' ... முதல் முயற்சியிலேயே சாதனை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு 03.03.2019 அன்று நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்ற நிலையில், அதற்கான இறுதி நாளான நேற்று, கலந்துகொண்ட தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் மாநில அளவில் அர்ச்சனா என்ற பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த அவர், அரசு பணிகள் மீது இருந்த ஆர்வம் காரணமாக அந்த வேலையை உதறிவிட்டு குடிமை பணி தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்த நிலையில், அவரது முயற்சி வீண் போகாமல், தனது முதல் முயற்சியிலேயே அர்ச்சனா சாதனை படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய அவர், ''என் மீது அதிகமான நம்பிக்கை இருந்ததால் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் இருந்த நிலையிலும், தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்ததாக கூறினார். மேலும் தகுந்த திட்டமிடுதலும், அயராத உழைப்பும் இருந்தால் நிச்சயம் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என கூறும் அர்ச்சனா, தினமும் தான் 10 மணி நேரம் படித்ததாக கூறியுள்ளார்.

EXAM, TNPSC, GROUP 1, ARCHANA, IT EMPLOYEE, FIRST ATTEMPT.