விவேக் பெயரை தெருவுக்கு வெச்சது மாதிரி, மயில்சாமி பெயரும் வைப்பாங்களா??... மகன்கள் சொன்னது என்ன??
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் மயில்சாமி கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், சினிமா பிரபலங்களை தாண்டி பொது மக்கள் பலரையும் கூட கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
Also Read | "ஒரு அம்மாவுக்கு இதைவிட என்ன வேணும்?".. தமிழக கால்பந்தாட்ட வீராங்கனையின் உருக்கமான பதிவு!!..
சினிமாவில் பெரும்பாடு பட்டு, தனக்கென ஒரு இடத்தை மயில்சாமி பிடித்துக் கொண்ட சூழலில், அவர் காமெடியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த பல காட்சிகள் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காதவை. சிறந்த நடிகர் என்பதை தாண்டி, யாராக இருந்தாலும் உதவி என கேட்டு வந்தால், தன்னிடம் இருப்பதையும் கொடுத்து அனுப்பும் குணம் படைத்தவர் தான் மயில்சாமி.
தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும் கூட, யாரிடம் கேட்டாவது கூட தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்து விடுவார். அப்படி நல்ல மனம் படைத்த மயில்சாமி, தீவிர சிவபக்தன் ஆவார். திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி செல்லும் மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன் கோவிலில் சிவராத்திரி தினம் இரவு முழுவதும் இருந்து விட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிய பின்னர் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மயில்சாமி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர், அமைச்சர் உதயநிதி என ஒட்டுமொத்த திரை உலகமும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர். மயில்சாமி மறைந்து சில தினங்கள் கடந்தாலும் தொடர்ந்து அவர் இல்லை என்ற விஷயம் பலரையும் வாட்டி தான் வருகிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது தந்தையின் இறப்பு குறித்து பரவி வரும் வதந்திக்கு அவரது மகன்கள் முற்றுப்புள்ளி வைத்து உண்மையில் நடந்த சம்பவத்தையும் எடுத்து விளக்கி இருந்தனர்.
மேலும் நடிகர் விவேக் மறைந்த போது அவரது தெருவிற்கு அவர் பெயர் வைத்தது போல மயில்சாமியின் தெருவிற்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என நடிகர் போண்டாமணி வேண்டுகோள் வைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு அப்படி செய்ய விருப்பம் உள்ளதா என்றும் கேள்வியும் முன் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மயில்சாமியின் மகன், "இல்ல. அப்பா அந்த மாதிரி விரும்ப மாட்டார். அப்பா எப்படின்னா எதையும் எதிர்பார்த்து இருக்காதே. உன்னால முடிஞ்சத செய், நல்லதை செய்.
எங்களுக்கு மூணு விஷயம் தான் சொல்லிக் கொடுத்திருக்காரு. பொய் சொல்லாதீங்க, யாரையும் ஏமாத்தாதீங்க, உங்களால் முடிந்த உதவியை பண்ணுங்க. நான் நிறைய பேருக்கு பண்ணிட்டேன், ஆனா எனக்கு எதையும் வச்சிக்கிற பழக்கம் இல்லை. உங்களால ஒருவேளை முடியலன்னா யாரையும் வெயிட் பண்ண வைக்காதீங்க. முடியும்னா முடியும், முடியாதுன்னா வேற யாருகிட்டயாச்சும் கேட்டு பாருங்க. எங்க அப்பா சொல்லிக் கொடுத்த இந்த விஷயத்தை தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்" என தெரிவித்தார்.
அதேபோல தனது தந்தை மயில்சாமி, மற்றவர்கள் அனைவருக்கும் உதவி செய்தது போல தாங்களும் இனி வருங்காலத்தில் அனைவருக்கும் உதவி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்