'பழகியவர்களை மறக்காமல் இருக்க டைரியில் லிஸ்ட்'... 'பெண்ணின் அம்மா சொன்ன மிரள வைக்கும் பதில்'... உண்மை தெரிந்து ஆடிப்போன இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திரைப்படங்களில் நடக்கும் சில சம்பவங்கள், அவ்வப்போது நிஜத்திலும் நடந்து விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

'பழகியவர்களை மறக்காமல் இருக்க டைரியில் லிஸ்ட்'... 'பெண்ணின் அம்மா சொன்ன மிரள வைக்கும் பதில்'... உண்மை தெரிந்து ஆடிப்போன இளைஞர்!

மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பாலகுருவிடம், மீரா என்ற பெயரில் ஒரு பெண் முகநூலில் அறிமுகமாகி உள்ளார். 6 மாதங்களாக நீடித்த நட்பு காதலாக மாறிய நிலையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீராவை பாலகுரு திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது உண்மையான பெயர் ரஜபுன்னிஷா என்றும் வேற்று மதத்தைச் சேர்ந்த அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் பாலகுருவுக்கு தெரியவந்துள்ளது.

இருந்தாலும் மீரா மீது கொண்ட காதலால் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் பாலகுரு. இந்நிலையில் இந்த நிலையில் அவர் ஓட்டுனர் பணிக்குச் சென்ற பின்னர் மீராவை சந்திக்க வேறு சில ஆண்கள் தனது வீட்டுக்கு வந்து செல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் பாலகுரு. இது குறித்து விசாரித்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீரா, அவரது வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச்சென்றுள்ளார்.

அங்கு சென்று பார்த்தால் மீராகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. தான் ஆசை ஆசையாகக் காதலித்து திருமணம் செய்த பெண்ணின் உண்மை முகம் தெரிந்து அதிர்ந்துபோனார் பாலகுரு. மீரா ஏற்கனவே 3 பேரைத் திருமணம் செய்து அவர்களைப் பிரிந்து வந்த நிலையில், 4 வதாக பாலகுருவை திருமணம் செய்ததும், அவரிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொண்டு 5 வதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் சென்று விட்டதும் தெரியவந்துள்ளது.

Mayiladuthurai woman known for cheating men in the name of marriage

இதையடுத்து அவரது தாயைத் தொடர்பு கொண்ட பாலகுரு, மீரா குறித்துக் கூறியுள்ளார். அதற்கு அவரது தாய், மீரா எப்படி வேண்டுமானாலும் இருக்க அவளுக்கு உரிமை உள்ளது எனக் கூறியுள்ளார். இந்த பதிலைக் கேட்ட பாலகுரு அதிர்ந்து போனார். இதையடுத்து தனது உறவினர்கள் புடை சூழ மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்ற பாலகுரு, தன்னை ஏமாற்றி ஒரு பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்று விட்டதாகவும் மொத்தமாக 3 லட்சம் ரூபாயையும் தனது வாழ்க்கையையும் இழந்து தவிப்பதாக மீரா மீது புகார் அளித்தார் பாலகுரு.

இதற்கிடையே டிக்டாக் மற்றும் முக நூலில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் பதியும் நபர்களின் தீவிரத்தைப் பார்த்து காதலர்களைத் தேர்வு செய்துள்ளார். மேலும் பழகியவர்களை மறக்காமல் அவர்களிடம் என்ன பேசினோம் மற்றும் அவர்கள் குறித்த விவரம் என அனைத்தையும் மீரா ஒரு டைரியில் குறித்து வைத்துள்ளார். பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் மன நிம்மதியையும் இழந்து பரிதவித்து நிற்கிறார் பாலகுரு.

மற்ற செய்திகள்