‘இவங்களுக்கும் 9 மாதங்கள்’... ‘பேறுகால விடுமுறை உண்டு’... ‘வெளியான உத்தரவு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு வேலைகளில், தற்காலிக பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் உள்பட அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும், பெண் ஊழியர்களுக்கு, 9 மாதங்கள் பேறுகால விடுப்பு (Maternity Leave) வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 மாதங்களாக இருந்த விடுப்பு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, நிரந்தர அரசுப் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கியதைப் போல், தற்காலிக முறையில் (Temporary) பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க கோரிக்கை எழுந்து வந்தது.
இதைத் தொடர்ந்து, தற்காலிகமாக பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தற்காலிக பணியில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.