'உன் காலுல வேணாலும் விழுறோம் மா'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் குழந்தை'... குடும்பத்தையே உலுக்கிய இளம்பெண்ணின் முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிலர் சில நேரங்களில் எடுக்கும் தவறான முடிவு எந்த அளவிற்கு அவர்களைச் சுற்றி இருக்கும் நபர்களைப் பாதிக்கும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.

'உன் காலுல வேணாலும் விழுறோம் மா'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் குழந்தை'... குடும்பத்தையே உலுக்கிய இளம்பெண்ணின் முடிவு!

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் போத்தியப்பன். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இருவருக்கு அருள் செல்வி என்ற 24 வயது மகள் உள்ளார். இவர் கல்லூரி பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில், இவருக்கு முருகானந்தம் என்ற நபருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாகச் சென்ற குடும்ப வாழ்க்கையின் பயனாக, இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுரையில் வசித்து வரும் தனது தோழி ஒருவரின் திருமணத்திற்குச் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு அருள் செல்வி மதுரைக்குப் புறப்பட்டு வந்தார். ஆனால் திருமணத்திற்குச் சென்றவர் திரும்பி வரவே இல்லை. அவரை மொபைல் போன் மூலமாகத் தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. இதனால் பதறிப் போன அவரது கணவர் முருகானந்தம், தனது மனைவி அருள் செல்வி மாயமாகி விட்டதாகத் திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்தது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை அருகில் பழக்கடை நடத்தி வரும் வாலிபர் ஒருவரும் அருள் செல்வியும் காதலித்து வந்தது தெரிய வந்தது. 

Married woman gone to meet her EX boyfriend in Madurai

தற்போது அந்த வாலிபருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததை அறிந்த அருள் செல்வி, தன்னை தொட்டு தாலி கட்டிய கணவரையும், தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையையும் உதறித் தள்ளி விட்டு தனது முன்னாள் காதலன் வீட்டில் அருள் செல்வி தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே இந்த தகவல் குறித்து அறிந்து சென்ற அருள் செல்வியின் உறவினர்கள், கணவர் மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார், மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் அருள் செல்வியை அழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது கூறிய பதில் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது போலீசாரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அதாவது,  ''எனக்குக் கணவரும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம். நான் மதுரையில் உள்ள எனது தோழி வீட்டில் வாழ்ந்து கொள்கிறேன்'' எனப் பிடிவாதமாக அருள் செல்வி கூறிவிட்டார்.

Married woman gone to meet her EX boyfriend in Madurai

ஒரு பக்கம் அவரது உறவினர்கள் அருள் செல்வியின் காலில் விழாத குறையாகக் கெஞ்சியும் அருள் செல்வி கொஞ்சமும் இறங்கி வரவில்லை. கணவன், 3 வயதுக் குழந்தையை இப்படித் தூக்கி எறிய எப்படி தான் மனது வந்ததோ எனக் காவல்நிலையத்திலிருந்த பலரும் நொந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்