'மூன்று கல்யாணம்' பண்ணியும் நிம்மதி இல்ல'...சண்டையிட்ட 'மனைவிகள்' ...'இளைஞர் செய்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

3 பெண்களைக் காதலித்து திருமணம் செய்த இளைஞர், விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மூன்று கல்யாணம்' பண்ணியும் நிம்மதி இல்ல'...சண்டையிட்ட 'மனைவிகள்' ...'இளைஞர் செய்த விபரீதம்'!

தர்மபுரியை சேர்ந்தவர் ராஜா. அழகுக்கலை நிபுணரான இவர், தனது மாமன் மகள் சத்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கையில் தம்பதியருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இதனிடையே வேலை நிமித்தமாக தேனிக்கு மாறுதலாகி சென்ற ராஜாவுக்கு, அங்கு தனலெட்சுமி என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாற, அவரை 2 வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார் ராஜா. அவருக்கும் 2 குழந்தைகள் பிறந்த நிலையில், மீண்டும் வேலை நிமித்தமாக மதுரைக்கு மாற்றப்பட்டார்.

மதுரையில் தனது பணியை தொடர்ந்த ராஜா, அங்கேயும் தனது காதல் லீலைகளை தொடர்ந்தார். அங்கு தாய் தந்தையரை இழந்து தனியாக வசித்து வந்த காவ்யா என்ற பெண்ணை காதலித்து 3-வதாக மணந்து கொண்டார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது இரண்டு மனைவிகளும் ராஜாவிடம் சண்டையிட்டு வந்தனர். இதனிடையே ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறித்து காவ்யாவுக்கு தெரியாத நிலையில், அவர் புதுச்சேரியில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து புதுச்சேரியில் தனியாக தங்கியிருந்த ராஜா, தனது மூன்றாவது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளர். ஆனால் தன்னை முறையாக ஊரறிய திருமணம் செய்து கொண்டால் மட்டுமே குடும்பம் நடத்த வருவேன் என உறுதியாக கூறிவிட்டார். ராஜா எவ்வளோவோ முயன்றும் காவ்யா தனது முடிவில் உறுதியாக இருந்தார். மற்றோரு பக்கம் முதல் இரண்டு மனைவிகளும் தங்களுடன் குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விரக்தியின் உச்சிக்கே சென்றார்.

இந்நிலையில் தனது மூன்றவது மனைவியின் மனதை மாற்ற நினைத்து வெகுநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது ஆசை வார்த்தைகளுக்கு மயங்காத அவர், கோபத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் மனம் உடைந்த ராஜா, தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அவரது செல்போன் மூலம் அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களைத் தேடியுள்ளனர். அதில் மனைவி 1, மனைவி 2, மனைவி 3 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த காவல்துறையினர், அந்த மூன்று எங்களுக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து ராஜாவின் சடலத்தை பெறுவதற்காக மூன்று பேரும், நாங்கள் தான் மனைவி என வந்து நின்றதால் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவரது அனுமதியின்றி 2 வது மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், ராஜாவின் சடலத்தை பெற முதல் மனைவியே தகுதியானவர் என்ற அடிப்படையில்,அவரின் சடலம் மாமன் மகளான சத்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே 3 வது மனைவி காவ்யா 19 வயது பெண் என்பதாலும், அவருக்கு ஆதரவு யாரும் இல்லை என்பதாலும் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் தனது கணவர் சடலத்தோடு சிறிது தூரம் செல்ல வேண்டும் என இரண்டாவது மனைவி தனலெட்சுமி கேட்டுக்கொண்டதால் அவரும், அந்த வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முறையற்று வாழ்ந்து, இறுதியில் நிம்மதியும் இல்லாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தான் சோகத்தின் உச்சம்.

SUICIDE, MARRIED, THREE WOMEN, PUDUCHERRY, THENI