"அவர ஏமாத்த மனசு இல்ல!".. 'திருமணம்' ஆன பத்தே நாளில் 'இளம் பெண்' எடுத்த 'முடிவு!'.. கதறிய பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான அடுத்த நாளே புது மணப்பெண் ஒருவர் காதலனை திருமணம் செய்துகொண்டு ஓட்டம் பிடித்ததுடன் ஆத்தூர் மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி, நடுவலூரைச் சேர்ந்த, பெரியசாமி என்பவரது மகன் 28 வயதான ரவிக்குமார். நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக பணிபுரியும் இவருக்கும் பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரத்தை சேர்ந்த, பூமாலை என்பவரது 20 வயது மகள் சந்தியாவுக்கும் கடந்த, 3-ஆம் தேதி, திருமணமானது.
அதன் பிறகு மறுநாள் மாலை, 6 மணிக்கு, கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற சந்தியா வீடு திரும்பாததால், அவரது கணவர் ரவிக்குமார், கெங்கவல்லி போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து, சின்னமசமுத்திரத்தை சேர்ந்த 23 வயது வல்லரசு என்பவரை, திருமணம் செய்து கொண்ட சந்தியா, ஆத்தூர் மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.
இதை அறிந்ததும் ரவிக்குமார், சந்தியாவின் உறவினர் என அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்ததும் சந்தியா, தானும் வல்லரசுவும் 2 வருடமாக காதலித்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவிகுமாரை கட்டாயமாக தனக்கு திருமணம் செய்துவைத்ததாகவும், எனினும் காதலனை ஏமாற்ற தனக்கு மனம் வராததால், மதுரை, கோவிலுக்கு அவருடன் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், மேற்கொண்டு காதலனுடனேயே தான் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
இதனை அடுத்து, ரவிகுமார் கட்டிய தாலி மற்றும் நகைகளை சந்தியா போலீஸாரிடம் ஒப்படைக்க, பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கப் போவதில்லை என்றும் மகள் என்கிற உறவே இனி தங்களுக்கு இல்லை' என்றும் கூறி கதறினர். ரவிக்குமாரோ, தான் சந்தியாவை 'திருமணம் செய்ததற்கு ஆன 2 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். இதனால் ரவிகுமாருக்கு வல்லரசு, 1.25 லட்சம் ரூபாயையும், சந்தியாவின் பெற்றோர், 75 ஆயிரம் ரூபாயையும், 10 நாளில் கொடுப்பதாக கூறி எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர்.
மற்ற செய்திகள்