'மூடப்படும் ஜெயலலிதா நினைவிடம்...' 'பொதுமக்கள் பார்வையிட தடை...' - பொதுப்பணித்துறை கூறும் காரணம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மெரினா கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நினைவிடங்களைப் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

'மூடப்படும் ஜெயலலிதா நினைவிடம்...' 'பொதுமக்கள் பார்வையிட தடை...' - பொதுப்பணித்துறை கூறும் காரணம்...!

தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் கடற்கரை, சுற்றுலா தளங்கள், நினைவிடங்களும், திறக்கப்பட்ட சூழலில், தமிழக பொதுப்பணித்துறை இன்று (02-02-2021) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் "அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா ஆகியவற்றின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்