'சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல...' 'அதுக்குள்ள எடுத்த முடிவுல மிகப்பெரிய சேஞ்ச்...' - மாஸாக வந்து மன்சூர் அலிகான் சொன்ன கபாலி பஞ்ச் டயாலக்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சினிமா நடிகரான மன்சூர் அலிகான் சில மாதங்களுக்கு முன் நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சுயட்சியாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நிற்கபோவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் தீடீரென நேற்று தான் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார். இதறகு காரணமாக மன்சூர் அலிகான் வெளியிட்டிருந்த ஆடியோவில், 'நான் இந்தத் தேர்தல்ல போட்டியிட வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். தொகுதியில எங்க போனாலும், பாய் எவ்ளோ பணம் வாங்கினீங்க?னு எல்லாருமே கேட்கிறார்கள்.
பாய் ஓட்டை பிரிக்கத்தான நிக்கறீங்களானு என்னிடமே கேட்கிறார்கள். பத்துல 8 பேர் ஒருமாதிரி பார்க்கிறார்கள். எனக்கு சங்கடமா இருக்கு. அதனால, இந்தத் தேர்தல் வேண்டாம் என்று முடிவு பண்ணி சென்னை போறேன். நான் தொண்டாமுத்தூர்ல போட்டியிடவில்லை' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலில் மீண்டும் தான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மதியம் பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த மன்சூர் அலிகான். சுயேச்சையாக போட்டியிடுவதால் சின்னம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களை சந்தித்த பிறகு மன்சூர் அலிகான், 'திரும்பி வந்துட்டேனு சொல்லு. என கபாலி பஞ்ச் வசனத்தை பேசியுள்ளார். மேலும், போற இடத்துல எல்லாம் பணம் வாங்கிட்டீயானு கேக்கறது, வாடகைக்கு வீடு கொடுக்காம பண்றதுனு என்னைய சோர்வடைய வைக்க நிறைய பண்ணாங்க. என்னை அனுப்பறதுக்காக திட்டம் போட்டிருக்காங்க. அதனால யாருக்கு லாபம் என தெரிந்து, அவர்களை ஒரு வழி பண்ணிடலாம் என்று கோதாவில் இறங்கி விட்டேன்.
அப்படியெல்லாம் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டேன். தென்னந்தோப்பு சின்னத்தை கேட்டு வாங்கிருக்கேன். தொண்டாமுத்தூர்ல தென்னை மரம்தான் நிறைய இருக்கு. நான் எங்கயும் போக மாட்டேன். இது என் சொந்த ஊரு. என் சொந்த மண்ணுல நிற்காம வேறு நான் எங்க நிற்க முடியும்?' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்