Michael Coffee house

'எதிரே வந்தவர் மீது எச்சிலை துப்பிய இளைஞர்'... 'கொரோனா வார்டில் அமர்க்களம்'... 'மனைவியுடன் எஸ்கேப்'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'எதிரே வந்தவர் மீது எச்சிலை துப்பிய இளைஞர்'... 'கொரோனா வார்டில் அமர்க்களம்'... 'மனைவியுடன் எஸ்கேப்'... பரபரப்பு சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று 32 வயது வாலிபர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அவருக்குக் காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்ததால் உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் என்னுடைய பரிசோதனை முடிவே இன்னும் வரவில்லை. அப்படி இருக்க ஏன் என்னை வார்டில் சேர்த்தீர்கள்? என்று கூறி அந்த வாலிபர் தகராறு செய்தார். மேலும் அவர் மருத்துவமனை பணியாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இரவில் உணவு வழங்கிய போது, உணவு வழங்கியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Man who tested for COVID-19 and who escaped from hospital

அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை உடைத்ததுடன், எதிரே வந்தவர்கள் மீது எச்சிலைத் துப்பி உள்ளார். இதையடுத்து இரவு பணியிலிருந்த மருத்துவர் அந்த வாலிபரைச் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அந்த மருத்துவரையும் அந்த இளைஞர் தாக்க முயற்சி செய்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு தனது மனைவியை வரவழைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

மருத்துவமனை ஊழியர்கள் அவருடன் சமரசம் பேச முயன்றும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை வழங்கத் தலைமை மருத்துவர் சேகர் அந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்