காணாமல்போன ஆடுகள்.. ஒரு வருஷம் தேடி திருடனை பிடித்த பலே நபர்.. சென்னையில் சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அருகே தனக்கு சொந்தமான ஆடுகளை திருடிச்சென்ற நபரை ஒரு வருடமாக தேடி கண்டுபிடித்திருக்கிறார் உரிமையாளர். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல்போன ஆடுகள்.. ஒரு வருஷம் தேடி திருடனை பிடித்த பலே நபர்.. சென்னையில் சுவாரஸ்யம்..!

                        Images are subject to © copyright to their respective owners.

காணாமல்போன ஆடுகள்

சென்னை அயனாவரம் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் ஶ்ரீதர். வழக்கறிஞரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10ககும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒருநாள் இரவு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீதர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்திருக்கிறார். அப்போது ஒரு ஆடு காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் தேடியிருக்கிறார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

Images are subject to © copyright to their respective owners.

புகார்

இதனையடுத்து, தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருக்கிறார் ஸ்ரீதர். அடுத்த மாதத்தில் மீண்டும் அதேபோல ஒரு ஆடு காணாமல் போகவே, அதிர்ச்சியடைந்த அவர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது. அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஆட்டை தூக்கிச் சென்றது தெரிய வந்திருக்கிறது. உடனடியாக இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் ஸ்ரீதர். ஆனாலும், ஆடுகளை திருடிச் சென்றவர் சிக்கவில்லை.

தேடுதல் வேட்டை

தனது ஆடுகளை திருடியவரை கண்டுபிடிக்கும் பணியில் தானே இறங்கியுள்ளார் ஸ்ரீதர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதர் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு தனது ஆட்டை திருடியவரை பார்த்த ஸ்ரீதர் சுதாரித்துக்கொண்டு அவரை பின்தொடர முடிவெடுத்துள்ளார். அதன்படி சென்று அவரது முகவரியையும் ஸ்ரீதர் அறிந்துகொண்டார். பின்னர் திங்கள் கிழமை காலை கொரட்டூர் பகுதியில் வைத்து ஆடு திருடனை கையும் களவுமாக பிடித்த வழக்கறிஞர் ஸ்ரீதர் அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 37 வயதான அக்பர் என தெரிய வந்திருக்கிறது. மேலும், திருடிய ஆடுகளை கொண்டு மட்டன் கடை ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார். அந்த நபர் 25 க்கும் மேற்பட்ட ஆடுகளை இவ்வாறு திருடி விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, GOAT, POLICE

மற்ற செய்திகள்