பாத்ரூமுக்குள் பதுங்கியிருந்த மர்ம நபர்.. மிரண்டுபோன வீட்டுக்காரர்.. வெளியே வந்ததும் மனுஷன் ஒன்னு சொன்னாரு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அறந்தாங்கியில் தனது வீட்டு கழிவறையில் மர்ம நபர் பதுங்கியிருப்பதாக ஒருவர் காவல் துறைக்கு தகவல் அளித்திருக்கிறார். இதனையடுத்து மர்ம நபரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | இங்கிலாந்து அரசரிடம் மேகன் மெர்க்கல் வச்ச கோரிக்கை.. யாருமே இதை எதிர்பார்க்கவே இல்ல.. என்ன நடந்துச்சு..?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது வீட்டில் சமையலறையை ஒட்டியபடி கழிவறை இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாணிக்கம் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மாணிக்கம், உள்ளே யார் என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து கதவை தட்டிப் பார்த்த மாணிக்கம், கதவு திறக்கப்படாததால் வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
விரைந்து வந்த போலீஸ்
இதனையடுத்து, கழிப்பறை கதவின் வெளிப்பக்க தாழ்ப்பாளை போட்டுவிட்டு காவல் துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கிறார் மாணிக்கம். இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து, உள்ளே இருந்தவரிடம் பேச்சுக்கொடுத்த போலீசார் அவரை வெளியே வரும்படி கூறினர். இதனையடுத்து அவரும் வெளியே வந்திருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அக்கினி பஜாரை சேர்ந்த சக்திவேல் என்பரின் மகன் சுப்பிரமணி என்பதும் அவர் தச்சுப்பட்டறையில் பணிபுரிந்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது.
விசாரணை
இந்நிலையில், மாணிக்கத்தின் வீட்டு கழிவறைக்குள் எதற்காக சென்றீர்கள்? என காவல்துறையினர் சுப்ரமணியிடம் கேள்வி எழுப்ப, தன்னை சிலர் தாக்குவதற்காக துரத்தி வந்ததாகவும், புதரில் பதுங்கியிருந்த பின்னர் தன்னை பாதுகாத்துக்கொள்ள கழிவறைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். இதனை தொடர்ந்து சுப்பிரமணி போதை பொருள் ஏதேனும் உட்கொண்டிருக்கிறாரா? அல்லது ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட வந்தாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறந்தாங்கியில் தனது வீட்டு கழிவறையில் மர்ம நபர் புகுந்துவிட்டதாக ஒருவர் புகார் அளித்த நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்த சம்பவம் உள்ளூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்