உயிர் பயம்.. ‘பொண்ணுங்க ஸ்கூலுக்கு போகவே பயப்படுறாங்க’.. மதுரை கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்த பெற்றோர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிர் பயம்.. ‘பொண்ணுங்க ஸ்கூலுக்கு போகவே பயப்படுறாங்க’.. மதுரை கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்த பெற்றோர்..!

மதுரை மாவட்டம் காண்டை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி-முருகேஸ்வரி தம்பதியினர், தங்களது இரு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பெண் பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முருகேஸ்வரியின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்துவரும் செல்வம் என்பவர், வீட்டில் தனியாக இருந்த முருகேஸ்வரியின் இரு பெண் பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது அரிவாளாலும் அவர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கையில் வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Man threatens school girls in Madurai

இதனைத் தொடர்ந்து சிந்துபட்டி காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை முனியாண்டி அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் செல்வத்தை கைது செய்தனர். இதனிடையே ஜாமினில் வெளியே வந்த செல்வம், சிகிச்சை முடிந்து வீட்டில் உள்ள முருகேஸ்வரியின் மகள்களை தினசரி மிரட்டி வந்துள்ளார். மேலும், பள்ளிக்கு செல்லும் சமயங்களில் அவர்களை பின் தொடர்ந்து அச்சுறுத்தல் தந்துள்ளார்.

Man threatens school girls in Madurai

இந்த நிலையில் மாணவிகளின் பெற்றோர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மனு அளித்தனர். அதில், தங்களது குடும்பத்தினருக்கும், செல்வத்திற்கும் எந்த பகையும் இல்லை. தேர்தல் முன்விரோதம் என பொய்யான காரணத்தை கூறி எங்கள் பிள்ளையின் கையில் வெட்டியதுடன், பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து அச்சுறுத்துகிறார். அதனால் உயிர் பயத்துடன் பள்ளிக்கு செல்லாமல், உணவு கூட உண்ணாமல் அச்சத்துடன் இருப்பதாக மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர்.

Man threatens school girls in Madurai

பள்ளி மாணவியின் கையை வெட்டியதோடு, தற்போது பள்ளிக்கு செல்லவிடமால் அச்சுறுத்தி வருவதால் மாணவிகள் அச்சத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த விவகாரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முனியாண்டி-முருகேஸ்வரி தம்பதியினர் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் பெண் பிள்ளைகள் தனியாக இருக்கும்போதே அவர்களை மிரட்டி இதுபோன்ற அச்சுறுத்தலில் ஈடுபடுவதால் அசம்பாவிதம் எதுவும் மீண்டும் ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்