“சாப்பாடு போட்ட என்கிட்டயே இப்படி பண்ணிட்டானே”.. கோயில் திருவிழாவுக்கு வரி கட்ட வாலிபர் செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயில் திருவிழாவிற்கு வரி கட்ட வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | 30 வருசமா ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் பெண்.. பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்..!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் வைய்யம்மாள் (வயது 80). கணவர் இறந்து விட்டதால் வைய்யம்மாள் தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு வைய்யம்மாள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் வைய்யம்மாள் கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார். இதனால் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி, நகையை பறிக்க விடாமல் போராடியுள்ளார். ஆனாலும் மூதாட்டி கழுத்தில் இருந்த நகையை விடாமல் அந்த மர்ம நபர் இழுத்துள்ளார். இதில் நகை 2 துண்டாக கீழே விழுந்துள்ளது. ஒரு பாதியை பறித்து கொண்டு அந்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.
இதனை அடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி கழுத்தில் இருந்த பாதி நகை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், மூதாட்டி வைய்யம்மாள் கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரய்யன் மகன் பார்த்தசாரதி (வயது 38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை அடுத்து பார்த்தசாரதியை உடனடியாக பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த பார்த்தசாரதி பின்னர் மூதாட்டியிடம் நகையை பறித்ததை ஒப்பக்கொண்டார். இதன் பின்னர், திருடி மண்ணில் பதுக்கி வைத்திருந்த தங்க நகையை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், கோவில் திருவிழாவிற்கு வரி செலுத்துவதற்கு பணம் இல்லை என்பதால் மூதாட்டியிடம் நகையை திருடியதாக பார்த்தசாரதி போலீசாரிடம் கூறியுள்ளார். இவர் மூதாட்டி வைய்யம்மாள் வீட்டில் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூதாட்டிக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். அவருக்கு மூதாட்டி வைய்யம்மாள் பணம் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவரது வீட்டில் பல நேரம் பார்த்தசாரதிக்கு சாப்பாடும் போட்டுள்ளார். சாப்பாடு போட்ட என்கிட்டயே நகை பறித்து விட்டானே என கண்ணீர் மல்க போலீசாரிடம் மூதாட்டி வைய்யம்மாள் தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்