அப்பா-மகன் தரையில் 'புரண்டதால்' காயம்... அதிரவைத்த எஃப்.ஐ.ஆர் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடையை அடைப்பது தொடர்பான விவகாரத்தில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த காமராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த அப்பா-மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பா-மகன் தரையில் 'புரண்டதால்' காயம்... அதிரவைத்த எஃப்.ஐ.ஆர் அறிக்கை!

இதையடுத்து இருவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இரண்டு எஸ்.ஐ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இது மட்டுமின்றி சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அனைவரும் கூண்டோடு பணிமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் அப்பா-மகன் கைது தொடர்பாக போலீசார் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், ''கடையை அடைக்கச் சொன்னோம். அதற்கு எங்களையே அவதூறாகப் பேசி அப்பாவும் மகனும் தரையில் புரண்டார்கள். அதில், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது,'' என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #சாத்தான்குளம் என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

மற்ற செய்திகள்