நின்னு... நிதானமா... "எங்கப்பாவ கொலை செஞ்சவர"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர், ராதாகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் ஒரு மெக்கானிக் ஷாப்பின் வெளியே நின்றுகொண்டிருந்த போது, கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்த மர்மக் கும்பல், ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிக் கொடுரமாக கொலை செய்துள்ளது.

நின்னு... நிதானமா... "எங்கப்பாவ கொலை செஞ்சவர"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்!

இதைத் தொடர்ந்து, ஸ்கார்ப்பியோ காரில் தப்பித்துச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். நீண்ட நேர சேஸிங்கிற்குப் பிறகு கொலையாளிகள் காரை மடக்கிய போலீஸார், காரில் இருந்த கொலையாளிகளை வளைத்துப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் போலீஸாரிடம் கூறியதாவது, "2013-ம் ஆண்டு நிலப் பிரச்சனை தொடர்பாக சேகர் என்பவரை, ராதாகிருஷ்ணன் ஊர் மத்தியில் வைத்து அடித்தே கொலை செய்துள்ளார். அவர்மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்ததால், மக்கள் பயந்துகொண்டு புகார் அளிக்கவில்லை. சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், சேகர் கொலை வழக்கிலிருந்து ராதாகிருஷ்ணன் விடுதலையானார். அப்பாவின் கொலைக்கு நீதி கிடைக்காததாலும் கொலை செய்த ராதாகிருஷ்ணனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்றும் உயிரிழந்த சேகரின் மகன் அரவிந்த் எங்களை அணுகினார்.

`எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் அப்பாவைக் கொன்னவனோட கதையை முடிச்சிடுங்க’ என முதலில் ஒன்றரை லட்ச ரூபாயைக் கொடுத்தார். அந்தப் பணத்தோடு எங்களிடமிருந்த பணத்தையும் சேர்த்து முதலில் கார் ஒன்றை வாங்கினோம். அதையடுத்து முதல் தவணையான 2 லட்ச ரூபாயைக் கொடுத்தார். அதன்பிறகு ஈரோடு வந்து கடந்த ஒரு மாதமாக ராதாகிருஷ்ணனை ஃபாலோ செய்தோம். கொலை செய்ய இரண்டு முறை ஸ்கெட்ச் போட்டோம். ஒருசில இடையூறுகளால் அது மிஸ் ஆனது. சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தோம். மூன்றாவது ஸ்கெட்ச்சில் வகையாகச் சிக்கிக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கூலிப்படையை ஏவிய அரவிந்தை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

CRIME, FATHER, SON