பையில் இருந்த ‘நகவெட்டி, டைகர் பாம்’.. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. சென்னை விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை இண்டிகோ 6E-66 விமானத்தில் வந்த சையத் நதீம் உர் ரஹ்மான் என்பவர் தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான பதிலளித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் கொண்டு வந்த பையை சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 5 டைகர் பாம் குப்பிகள், 6 நிவியா முகப்பூச்சு டப்பாக்கள், 3 சிறிய பொம்பை பந்தயக் கார்கள், 2 நக வெட்டிகள் இருந்துள்ளன. இந்த பொருட்களை ஆராய்ந்தபோது அவற்றில் தங்கம் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நகவெட்டிகளில் இருந்த பாட்டில் திறப்பான்கள் மற்றும் சிறிய கத்திகள் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு தங்கத்துண்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 14.12 லட்சம் மதிப்புள்ள 286 கிராம் தங்கம் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்