எஸ்ஐ குடும்பத்துக்கு ஏதாவது உதவனும்னு நெனச்சேன்.. ‘ஊர் ஊராக யாசகம் பெற்ற பணம்’.. நெஞ்சை நெகிழ வைத்த மனிதர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ குடும்பத்திற்கு யாசகர் ஒருவர் நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்ஐ குடும்பத்துக்கு ஏதாவது உதவனும்னு நெனச்சேன்.. ‘ஊர் ஊராக யாசகம் பெற்ற பணம்’.. நெஞ்சை நெகிழ வைத்த மனிதர்..!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் சிறப்பு எஸ்ஐ-ஆக பூமிநாதன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.

Man funding for special SI Family who recently murder by gang

இந்த நிலையில் யாசகர் ஒருவர் உயிரிழந்த எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தில் சேர்ந்தவர் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகமாக பெரும் பணத்தை அவ்வப்போது பொது பயன்பாட்டுக்காக வழங்குவது உண்டு. கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3.40 லட்சம் பணத்தை நிவாரண நிதியாக மதுரை கலெக்டரிடம் இவர் வழங்கினார். இதற்காக சுதந்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் இவரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Man funding for special SI Family who recently murder by gang

இந்த சூழலில் திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் யாசகம் பெற்று வந்த பாண்டியன் நேற்று மதுரை திரும்பினார். அப்போது யாசகமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் குடும்பத்துக்கு நிதியாக வழங்குவதாக கூறி மதுரை கலெக்டர் கொடுத்தார்.

Man funding for special SI Family who recently murder by gang

இதுகுறித்து பேசிய யாசகர் பாண்டியன், ‘ஆடு திருட்டு கும்பலால் சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென எண்ணினேன். அதனால் பொதுமக்களிடம் யாசகமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாயை மதுரை கலெக்டரிடம் கொடுத்துள்ளேன்’ என கூறினார். யாசகர் பாண்டியனின் செயல் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்