‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி! .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா?’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஒரு வருட காலமாக இருந்து வரும் நிலையில், ஏறக்குறைய மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிவிட்டனர்.

‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி! .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா?’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன?

பலரையும் பலிகொண்ட கொரோனாவைத் தடுப்பதற்கான எளிய மற்றும் உடனடி வழிமுறைகளாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி, சானிடைஸர் மற்றும் சோப் போட்டு கைகளை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் தான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனை செலுத்துவதற்கான முயற்சியில் பிரிட்டன் களமிறங்கியது. பைசர் தடுப்பூசியை பிரிட்டன் செலுத்தி வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது ஸ்பெயினில் தொடங்கி இங்கிலாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா வரை பரவிவரும் புதிய ரக கொரோனா வைரஸ் பெருத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

முந்தையை வைரஸை விட வெகு வேகமாக இந்த புதிய ரக வடிவத் திரிபு அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பிரிட்டனில் இருந்து வந்த பயணிக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட சீரிய முயற்சி காரணமாக கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்படி மீண்டும் ஒரு பயணி கொரோனா தொற்றுடன் பிரிட்டனில் இருந்து வந்துள்ளார். அவருக்கு புதிய ரக கொரோனா வைரஸ் (Mutated Corona Virus) இருக்குமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், அவருடைய சளி மாதிரியை புனே  Pune virology instituteக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிரிட்டனில் இருந்து வேகமாக பரவி வரும் மரபியல் மாற்றம் அடைந்த அதிதீவிர கொரோனா வைரஸ் பற்றி மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்திருக்கும் நபருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 10 நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டன் வழியாக சென்னை வந்த 1,088 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால தெரிவித்துள்ளார். அத்துடன் அரசின் தீவிர கண்காணிப்பு இருப்பதால் மக்கள் இதுபற்றி அச்சம் அடைய வேண்டாம் என்றும் அதேசமயம் கொரோனாவில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள ஏற்கனவே நாம் பின்பற்றி வரக்கூடிய முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி,சமூக இடைவெளி மற்றும் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்றினாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: 'செல்ஃபி எடுத்ததால் வந்த வினை'! .. 'அதிபருக்கே ₹2.5 லட்சம் ரூபாய் அபராதம் போட்ட நாடு'!

மேலும் பிரிட்டனில் இருந்து சென்னை வந்திருக்கும் அந்த கொரோனா பாதித்த நபருக்கு புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருக்கிறதா? என்பது பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்றும் ஆனால் அவர் இயல்பாக இருப்பதாகவும் கிண்டி கிங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரிட்டனிலிருந்து வேறு நாடுகள் வழியாக தமிழகம் வருபவர்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சீரிய முயற்சிகளை மேற்கொண்டது போல் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் நாம் செயல்படுவோம், ஆகையால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்