அடிக்கடி காணாமல் போன நகைகள்.. சிசிடிவி கேமராவை வச்சுட்டு வெயிட் பண்ண உரிமையாளர்.. இறுதியில் வெளிவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டத்தில் தங்க நகை திருடியவரை சிசிடிவி கேமரா மூலமாக வீட்டின் உரிமையாளரே கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடு ரோட்ல கும்ஃபூ.. "அங்க என்ன சத்தம்".. போலீசை கண்டதும் தெறித்து ஓடிய போதை ஆசாமி..!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியிலேயே பெட்டி கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி தங்க நகைகள் காணாமல் போயிருக்கின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் தங்க நகைகளை திருடுவது யார்? என்பதை கண்டறிய பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார்.
சிசிடிவி கேமரா
இதனை அடுத்து தனது வீட்டில் தங்க நகைகள் வைக்கப்பட்டு இருக்கும் பீரோவிற்கு எதிரே சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார் குணசேகரன். சில நாட்கள் கழித்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார் குணசேகரன்.
நகை திருட்டு
குணசேகரனின் பேத்தியை தினமும் குளிக்க வைக்க லட்சுமி என்பவர் வருவது வழக்கம். கடந்த நான்கு மாத காலமாக குணசேகரனின் வீட்டிற்கு வந்து சென்ற லட்சுமி கண்டி புதூர் பகுதியை சேர்ந்தவர். இவர் குணசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவைத் திறந்து அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை பார்த்த குணசேகரன் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.
இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் கண்டி புதூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பலனாக அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தனது வீட்டில் தங்க நகைகளை திருடியவரை பொறி வைத்து பிடிப்பது போல் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த குணசேகரனுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். குணசேகரன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற பெண்ணே அவரது வீட்டில் தங்க நகைகளை திருடியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டவாளத்துல பாறைய வச்சு.. ரயிலயே கவிழ்க்க திட்டம்.. இளைஞர் போட்ட பலே பிளான்..
மற்ற செய்திகள்