காசு எடுக்கப்போன இளைஞருக்கு ஷாக் கொடுத்த ATM.. 20 ரூபாய் எப்படி?.. குழம்பிப்போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி அருகே 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் வந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இணையத்தின் பயன்பாடும், தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்ட புரட்சியும் மனித குலத்திற்கு பெரும் கொடைகளை அளித்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது ATM இயந்திரங்களின் வருகையும், இணைய வங்கி சேவையும் தான். பணம் எடுக்க வங்கிகளுக்கு சென்று கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்துவிட்டன இவை இரண்டும். ஆனாலும், தொழில்நுட்ப குளறுபடிகளால் சில நேரங்களில் ATM மையங்களிலும் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கும் . அப்படியான சம்பவம் தான் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
தூத்தூக்குடியை சேர்ந்தவர் ஐயப்பன். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் இவர் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார் ஏடிஎம் மையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் 3800 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருக்கு 3140 ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கிறது. அதாவது 200 ரூபாய்களுக்கு பதிலாக 20 ரூபாய் கிடைத்திருக்கிறது.
6 ஐநூறு ரூபாய் நோட்டுகளும், 1 நூறு ரூபாய் நோட்டுகளும் 2 இருபது ரூபாய் நோட்டுகளும் வந்துள்ளன. அதாவது இரண்டு 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 20 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
ATM மையத்தில் புகார் எண் இல்லாததால் குழப்பமடைந்த அவர்
அப்போது தனது வங்கிக்கு போன் செய்து இதுபற்றி பேசியிருக்கிறார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் ஏடிஎம் மையத்தின் பணம் நிரப்பும் பணிகளைக் கவனித்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். அப்போது, ATM இயந்திரத்தில் 20 ரூபாய் நோட்டுகள் வர வாய்ப்பில்லை எனவும், ஒருவேளை அப்படி நடந்திருந்தால் 3 நாட்களில் அவருடைய தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்