"திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலையில் பெண்களிடம் 50 சவரன் நகைகளை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!

கோவை,  கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த பெண் ஒருவர், திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர்  தன்னை ஏமாற்றிய நகைகளை வாங்கி மோசடி செய்ததாக, அவர்மீது புகார் அளித்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக பல ஊர்களைச் சேர்ந்த பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அந்த நபர், அந்த பெண்களிடம் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் இந்த பெண்களிடம் மோசடி செய்து வாங்கிய நகைகளை பிரசாந்த் என்பவர் மூலம் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும், அவர் தெரிவித்ததையடுத்து போலீஸார் பிரசாந்தையும் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்