ஊருக்கே இந்த 'வைரஸ்' ஆப்பு அடிச்சுதுல்ல... அத வச்சே அடுத்த 'ரவுண்டு' ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... பிரபலமாகும் கொரோனா 'பெட்டிகடை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய நீதிமன்றம் அருகே ஒரு உணவக கட்டிடம் ஒன்றின் அருகே சிறிய பெட்டிக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிக்கடைக்கு வைக்கப்பட்ட பெயர் தற்போது அந்த பகுதியில் பிரபலமாகி வருகிறது. காரணம் அந்த கடையின் பெயர் 'கொரோனா'.

ஊருக்கே இந்த 'வைரஸ்' ஆப்பு அடிச்சுதுல்ல... அத வச்சே அடுத்த 'ரவுண்டு' ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... பிரபலமாகும் கொரோனா 'பெட்டிகடை'!

இந்த கடைக்கு உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் பெயர் வைக்க காரணம் என்ன என்பது குறித்து கடையின் முதலாளி ரமணா கூறுகையில், 'கேரளா மாநிலத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்துள்ளேன். கொரோனா பரவல் காரணமாக கடையை அடைத்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் போக சொல்லி விட்டார்கள். சொந்த ஊருக்கு வந்த நிலையில் 80 நாட்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன்.

வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து வந்த நிலையில், அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றின் ஒரு பகுதியை பெட்டிக்கடையாக வைத்துக் கொள்ளலாமா என கேட்க அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். கொரோனா வைரஸ் காரணமாக தான் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தேன். அதனால் அதன் பெயரிலேயே துவங்கலாம் என முதலீடு செய்து கொரோனா பெயரை வைத்தேன். கடை வைத்து ஒரே வாரத்தில் ஊர் முழுவதும் சேதி தெரிந்து விட்டது. வியாபாரமும் பரவாயில்லை' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்